மனிதா மனிதா

  மனிதா..மனிதா பணமா பெரிதா உன்மனதைப் புதிதாய் மாற்று கெதியா பிறக்கும்போது ஒன்றும் -நீ கொண்டுவந்ததில்லை… இறக்கும்போது ஒன்றும் -நீ கொண்டுசெல்வதில்லை…இதை உணர்ந்தால் நீ உய்வாய் -நல்ல உயர்வை நீ பெறுவாய்..     ஊருக்கும் உறவுக்கும்-உன்னால்முடிந்ததை செய்வாய்   பேருக்கும் புகழுக்குமாக -நீ அலைவதை விடுவாய்… அடுத்துக் கெடுக்கும் போக்கை அடியோடே மறப்பாய் அடுத்தவர்க்கும் உணவளித்து அன்பினையே விதைப்பாய்….. உடன்பிறப்பை ஒதுக்கிடாமல் அணைத்துக் கொள்ளுவாய்… உன் இறுதிக்காலம் நெருங்கும்போது இதை உணர்ந்து கொள்ளுவாய்… நோய்நொடிகள் வரும்பொழுது விழித்துக்

அன்னை மண்

அன்னை திருக்கோவில் மண்ணே உன்னை . அள்ளி முத்தமிட வேண்டுமம்மா.. உன் மடியில் வந்து நான் விழவேண்டும்… என்னை மறந்து விம்மி விம்மி அழவேண்டும்… புலத்தில் நான் வாழ்ந்த போதினிலும் -எந்தன் உளத்தில் நீதானே இருக்கின்றாய்… கண்கள் பனித்திடவே தூங்குகின்றேன் -நான் கனவிலும் உன்னையே காணுகின்றேன்…. நீண்ட கடற்கரையில் நான் நடந்து -உன் அழகை ரசித்து திரிந்தவன் நான் மீண்டும் உன்மடியில் சாய்ந்திடவே -வரம் வேண்டும் எனக்கென்று உனை வணங்குகிறேன் நேரில் உனைக்காண வரும் வரைக்கும் -உன்