மனிதா மனிதா

 

மனிதா..மனிதா பணமா பெரிதா

உன்மனதைப் புதிதாய் மாற்று கெதியா

பிறக்கும்போது ஒன்றும் -நீ

கொண்டுவந்ததில்லை…
இறக்கும்போது ஒன்றும் -நீ
கொண்டுசெல்வதில்லை…இதை
உணர்ந்தால் நீ உய்வாய் -நல்ல
உயர்வை நீ பெறுவாய்..

 

 

ஊருக்கும் உறவுக்கும்-உன்னால்முடிந்ததை செய்வாய்

 

பேருக்கும் புகழுக்குமாக -நீ
அலைவதை விடுவாய்…
அடுத்துக் கெடுக்கும் போக்கை
அடியோடே மறப்பாய்
அடுத்தவர்க்கும் உணவளித்து
அன்பினையே விதைப்பாய்…..

உடன்பிறப்பை ஒதுக்கிடாமல்
அணைத்துக் கொள்ளுவாய்…
உன் இறுதிக்காலம் நெருங்கும்போது
இதை உணர்ந்து கொள்ளுவாய்…
நோய்நொடிகள் வரும்பொழுது
விழித்துக் கொள்ளுவாய்
பாய் விழுந்து படுத்திடாமல்
பார்த்துக் கொள்ளுவாய்….

என்ன கொண்டுவந்தாய் -நீ
கொண்டு செல்வதற்கு…
மண்ணும் பொன்னும் பொருளும்
உன் கூட வருவதில்லை…
நூறு கோடி பணமிருந்தும்
என்ன கண்டு கொண்டாய்…
ஆறு அடி நிலமும் கூட
உனக்கில்லையென்று அறிவாய்….

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *