அன்னை மண்

அன்னை திருக்கோவில் மண்ணே உன்னை .

அள்ளி முத்தமிட வேண்டுமம்மா..
உன் மடியில் வந்து நான் விழவேண்டும்…
என்னை மறந்து விம்மி விம்மி அழவேண்டும்…

புலத்தில் நான் வாழ்ந்த போதினிலும் -எந்தன்
உளத்தில் நீதானே இருக்கின்றாய்…
கண்கள் பனித்திடவே தூங்குகின்றேன் -நான்
கனவிலும் உன்னையே காணுகின்றேன்….

நீண்ட கடற்கரையில் நான் நடந்து -உன்
அழகை ரசித்து திரிந்தவன் நான்
மீண்டும் உன்மடியில் சாய்ந்திடவே -வரம்
வேண்டும் எனக்கென்று உனை வணங்குகிறேன்

நேரில் உனைக்காண வரும் வரைக்கும் -உன்
நினைவாகவே நான் இருப்பேன்…என்
பேரில் உன்னை வைத்து பூஜிக்கிறேன்…என்
ஊரில் நான் வாழ யாசிக்கிறேன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *